Foundation

S
adhu
Serve...Learn...Give...
விவேகசூடாமணி
பூஜ்யஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் ஆதிசங்கராச்சார்ய பகவத்பாதாள் அருளிய
விவேகசூடாமணி
“ஸ்ரீ உலகநாத சுவாமிகளின் தமிழ்க் கவிதை மொழி பெயர்ப்பை அடியொற்றிய நூல்"

மனிதராய் பிறந்தவர் ஒவ்வொருவரும் ஆனந்தந்தத்தை தேடியே பலவிதத்திலும் அலைகின்றனர். "எத்தை தின்றால் பித்தம் தெளியும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, கேள்விப்படும் பலவகையான பாதையில் அதனை அடைய முயற்சிக்கின்றனர். இந்த தேடுதலுக்கு பங்கம் விளைவிப்பது போன்று சிலரின் முட்டாள்தனமான "உண்மையை அடைய பல வழிகள்" போன்றதான பிதற்றல்கள். ஆனந்தத்தை அடைய என்னதான் வழி என்றால், அதுவே "பகவான் பாஷ்யகாரர்" என்று மரியாதையோடு அழைக்கப்படும் "ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யார்" பரம்பரைக்கு கட்டுப்பட்டு அருளிய "அத்வைதம்" எனும் பொக்கிஷம்.
இந்த உண்மை எளியதானதாக இருந்தாலும், "எளிமை அரியது" என்பதால், அறிவதற்கு இயலாத காரணத்தால் பல நூல்களை படைத்தார். இந்த வகையில் "பிரஸ்தான த்ரயம்" என்பதான "பகவத் கீதை", "உபநிடதங்கள்", "பிரம்ம ஸூத்திரம்" ஆகியவைகளுக்கு எழுதப்பட்ட விளக்கங்களும் அடங்கும். இது பல விஷயங்களை விரிவாக இடங்களில் கையாள்வதாலும், சமஸ்கிருத பாஷையில் இருப்பதாலும், இதனை ஒரு கற்றறிந்த ஆச்சாரியன் இல்லாமல் புரிந்து கொள்வது இயலாததாக ஆகின்றது. இதனை எளிமையாக்க எழுதப்பட்ட நூல்களே பிரகரண கிரந்தங்கள் எனப்படுகின்றது.
பல இந்த பிரகரண நூல்களில் மிகவும் முக்கியமானதாகவும் பிரபலமானதாகவும் ஏற்கப்படுவது இந்த "விவேகசூடாமணி" ஆகும். இந்த நூல் தமிழில் "ஸ்ரீ உலகநாத சுவாமிகள்" என்பவரால் கவிதை வடிவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலுக்கு "பகவான் ஸ்ரீ இரமண மகரிஷி" அவர்கள் எழுதிய தாத்பர்யம் இந்த நூலின் பெருமையை பறைசாற்றுவதாக இருக்கின்றது.
